Apr 25, 2019 06:53 AM

விஜய், ரஜினியை தொடர்ந்து நயன்தாராவை டிக் அடித்த மற்றொரு முன்னணி ஹீரோ!

விஜய், ரஜினியை தொடர்ந்து நயன்தாராவை டிக் அடித்த மற்றொரு முன்னணி ஹீரோ!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுடன் ஜோடியாக நடிக்க பல ஹீரோக்கள் விரும்புகிறார்கள். இதனால், நயனின் டைரி நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பவர் மறுபக்கம் சோலோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

 

தற்போது ரஜினி, விஜய் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாராவை தனது படத்தில் ஹீரோயினாக்க சூர்யாவும் முடிவு செய்துள்ளாராம்.

 

Actor Surya

 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புது படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்குவதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாம். தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருவதால் நயனிடம் தேதி இல்லை என்றாலும், சூர்யா என்பதால் அவர் தேதியில் அட்ஜெஸ்ட் செய்து நிச்சயம் சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது.