May 08, 2019 04:01 AM

ரஜினி, தனுஷ் இணையும் படம்! - இயக்கப் போவது யார் தெரியுமா?

ரஜினி, தனுஷ் இணையும் படம்! - இயக்கப் போவது யார் தெரியுமா?

‘பேட்ட’ வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்கள் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அதே சமயம், பாராளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், போட்டியிட தயார் என்று அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், திரைப்படங்களில் நடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

 

இந்த நிலையில், ‘தர்பார்’ படம் முடிந்த பிறகு தனுஷுடன் ஒரு படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தனுஷ் தனது வுண்டெர்பார் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்த நிலையில், சில படங்களால் அவர் நிறுவனத்திற்கு நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் படம் தயாரிப்பை தனுஷ் நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

தனுஷின் நஷ்ட்டத்தை ஈடுகட்டுவதற்காகவே ரஜினிகாந்த், தனுஷி தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுக்கிறாராம். ஏற்கனவே தனுஷின் வுண்டெர்பார் நிறுவனம் ரஜினியின் ‘காலா’ படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.