Jul 31, 2018 08:01 PM

காவேரி மருத்துவமனை வந்த ரஜினிகாந்த் - கருணாநிதி குடும்பத்தாரை சந்தித்தார்

காவேரி மருத்துவமனை வந்த ரஜினிகாந்த் - கருணாநிதி குடும்பத்தாரை சந்தித்தார்

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்திப்பதற்காக வந்த ரஜினிகாந்த், கருணாநிதியின் குடும்பத்தாரிடம் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டு அறிந்ததோடு, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

வெளியூரில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், இன்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேராக காவேரி மருத்துவமனை வந்த அவர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரை சந்தித்து கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தார்.

 

Rajini and Azhagiri

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “இந்திய அரசியலில் முக்கிய தலைவர் கருணாநிதி. அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினேன். அவர் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.