மகள் திருமணத்தில் ரஜினி செய்த விஷயம்! - அதிர்ந்துபோன அரங்கம்

ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், விசாகன் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். தற்போது விசாகனுக்கும், செளந்தர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் செளந்தர்யா - விசாகன் திருமணத்திற்காக ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் நேரில் அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
நேற்று முன் தினம் ராகவேந்திரா மண்டபத்தில் செளந்தர்யா - விசாகன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நாளை திருமணம் நடைபெற உள்ளது. மொத்தம் நான்கு நாட்களாக நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சியின், நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது.
இதில், திருமண வீட்டார் மற்றும் வந்திருந்த விருந்தினர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தார்கள். அப்போது ரஜினிகாந்த் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். திடீரென்று “ஒருவன் ஒருவன் முதலாளி” பாடல் ஒலிக்க, அங்கிருந்தவர்கள் ரஜினியை நடனம் ஆட அழைத்தார்கள். அவர்களது அழைப்பை ஏற்ற ரஜினியும், எழுந்து நின்று, ஸ்டெப் ஒன்றை போட, அங்கிருந்தவர்கள் விசில் அடித்து செய்த ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்து போனதாம்.
வீடியோவை பார்க்க
https://www.youtube.com/watch?v=5tuXBGswKs0