இந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகரான ரஜினி! - அதிர்ச்சியளிக்கும் ‘தர்பார்’

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், ‘கபாலி’ படத்திற்கு பிறகு இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துவிட்டார். அவரது படங்களுக்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு கிடைப்பதோடு, வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைக்கிறது.
இதற்கிடையே, தீவிர அரசியலிலும் ஈடுபட்டிருக்கும் ரஜினிகாந்த், அதே சமயம் அதிக படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அதன்படி, ‘பேட்ட’ வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அப்படத்தின் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகியுள்ளார். ஆம், ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்துக்கு ரூ.100 கோடி சம்பளமாம்.
சர்வதேச மார்க்கெட் கொண்ட பாலிவுட் படங்களில் நடிக்கும் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் ஆகியோர் கூட சம்பளமாக இந்த தொகையை பெற்றதில்லையாம். படத்தின் லாபத்தில் கிடைக்கும் ஷேரில் தான் சம்பளத்தை பெறுவார்களாம். ஆனால், ரஜினிகாந்தோ சம்பளமாகவே ரூ.100 கோடி பெற்றிருப்பதால், இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் ரஜினி தான் என்று கூறப்படுகிறது.
மும்பையில் நடைபெற்று வந்த ‘தர்பார்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு இம்மாதம் 29 ஆம் தேதி துவங்குகிறது.