திருமணமான நடிகையுடன் ஜோடி போட விரும்பும் ரஜினிகாந்த்!

‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தனது அடுத்தப் படத்தை அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், தற்போது இமயமலைக்கு சென்றிருக்கிறார். அங்கு சுமார் 10 நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ள அவர், அதன் பிறகு தனது புதுப்படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘தலைவர் 168’ என்று அழைக்கப்படும் ரஜினியின் புதுப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சிவா இயக்குகிறார். டி.இமான் இசையமைப்பார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது போல, ஹீரோயின் தொடர்பான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஹீரோயினாக ஜோதிகாவை நடிக்க வைக்குமாறு ரஜினி சிபாரிசு செய்திருக்கிறாராம். ஏற்கனவே ரஜினியின் ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்திருந்தாலும், ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை. எனவே, இப்படத்தில் ஜோதிகா நடிக்க ஓகே சொன்னால், முதல் முறையாக ரஜினியுடன் ஜோடி போடுவார்.
தற்போது ஜோதிகாவிடம் ‘தலைவர் 168’ படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். ஒருவேளை ஜோதிகா நோ சொன்னால், ரஜினியுடன் ஏற்கனவே நடித்திருக்கும் மற்றொரு திருமணமான நடிகையிடம் பேசவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.