Jan 27, 2019 04:49 AM

ராம் சரணின் படத்திற்காக 100 நாட்கள் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சி!

ராம் சரணின் படத்திற்காக 100 நாட்கள் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சி!

தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும்,  மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினயை விதேயா ராமா" தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு  இப்படத்தை இயக்குகி உள்ளார். 'பாரத் என்னும் நான்' என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் பிரசாந்த்,சினேகா, மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு,அரசியல்,செண்டிமெண்ட்,வன்முறை, சாஹசம், என்று  பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா"  உருவாகியுள்ளது.

 

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, ஆர்தர் A வில்சன்  ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள்  பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது.  பதினோரு கோடி ரூபாய்  செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி   மட்டும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர் .கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். வசனம் T.கிருஷ்ணமூர்த்தி, பாடல்கள் சுகுமார் கணேசன்.

 

தெலுங்கில் விமர்சனங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிபெற்ற, டிடிவி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் ‘வினயை விதேயா ராமா’ பிப்ரவரி 1 முதல் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.