Dec 30, 2019 05:05 AM

விஜய்க்கு அம்மாவான ரம்யா கிருஷ்ணன்!

விஜய்க்கு அம்மாவான ரம்யா கிருஷ்ணன்!

5 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன், ஹீரோயின், வில்லி, குணச்சித்திர என 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

 

ரஜினியின் ‘படையப்பா’ மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான ரம்யா கிருஷ்ணன், ‘பாகுபலி’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘குயின்’ வெப் சீரிஸ் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதால், வெப் சீரிஸ் தளத்திலும் அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.

 

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் உருவாக உருவெடுத்திருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரம்யா கிருஷ்ணன் அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. 

 

Vijay Devarkonda

 

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ’ஃபைட்டர்’ படத்தில் அவருக்கு ரம்யா கிருஷ்ணன் தான் அம்மாவாக நடிக்கிறாராம். இந்த படத்தில் ஹீரோயினாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறாராம்.