Apr 01, 2020 09:03 AM

கவர்ச்சிக்கு கிடைத்த பலன்! - ரம்யா பாண்டியன் கையில் இரண்டு லட்டு

கவர்ச்சிக்கு கிடைத்த பலன்! - ரம்யா பாண்டியன் கையில் இரண்டு லட்டு

2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஆண் தேவதை’ படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஈடுபட்டு வந்தார்.

 

இதற்கிடையே, நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் வழியை பின்பற்றிய ரம்யா பாண்டியன், தனது இடுப்பழகை காட்டியவாறு சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, மேலும் பல கவர்ச்சி புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டு வந்தார்.

 

தற்போது ரம்யா பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களுக்கு பலனாக லட்டு போன்ற இரண்டு பெரிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருக்கிறது.

 

Ramya Pandiyan

 

சமீபத்தில், சமூக வலைதளப் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரம்யா பாண்டியன், தனது புதிய படங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், இப்படங்கள் குறித்த பிற தகவல்களை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இப்படி தனது கவர்ச்சி புகைப்படங்கள் வைரலானதால், தனக்கி கிடைத்திருக்கும் பட வாய்ப்புகளால் குஷியடைந்திருக்கும் ரம்யா பாண்டியன், கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை தொடரவும் முடிவு செய்துள்ளாராம்.