May 04, 2019 07:06 PM

தன்னை விட 15 வயது குறைவான நடிகருடன் ஜோடி சேரும் ரேகா! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தன்னை விட 15 வயது குறைவான நடிகருடன் ஜோடி சேரும் ரேகா! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் ரேகா. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர், ‘கடலோர கவிதைகள்’, ‘புன்னகை மன்னன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 

தற்போது குணச்சித்திர வேடம் மற்றும் அம்மா வேடங்களில் நடித்து வரும் ரேகா, தன்னை விட 15 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ரெடியாகியுள்ளார்.

 

ஆம், தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உள்ள யோகி பாபு, ‘தர்மபிரபு’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். 

 

இப்படத்தில் யோகி பாபுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ரேகா, நிகழ்ச்சியில் பேசும் போது, யோகி பாபுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். படத்தின் டிரைலரை பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். யோகி பாபுக்கு ஜோடியாக நிச்சயம் நடிப்பேன், என்று கூறினார்.

 

Rekha and Yogi Babu in Dharma Prabhu

 

பொதுவாக ஹீரோக்களுக்கு எவ்வளவு வயதானாலும், இளம் பெண்களுடன் ஜோடி சேருவதை வழக்கமாக வைத்திருக்க, 48 வயதாகும் ரேகா, 33 வயதாகும் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிப்பேன், என்று கூறியது ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.