May 05, 2019 04:04 AM

மதம் மாறிய நடிகை கஸ்தூரி? - பரபரப்பு ஏற்படுத்தும் புகைப்படம் இதோ

மதம் மாறிய நடிகை கஸ்தூரி? - பரபரப்பு ஏற்படுத்தும் புகைப்படம் இதோ

நடிகை கஸ்தூரி தனது பேச்சால் பரபரப்பு ஏற்படுத்துவார் அல்லது தன்னை பற்றி மற்றவர்களை பேச வைத்து பரபரப்பு ஏற்படுத்துவார். எப்படிப்பார்த்தாலும், அவரைப் பற்றி அவ்வபோது பரபரப்பான செய்திகள் மட்டும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது.

 

குட்டை பாவாடை, நிகழ்ச்சிகளில் ஓவராக பேசுவது, மூத்த நடிகையையும், நடிகரையும் இழிவாக பேசியது போன்ற சர்ச்சைகளில் இருந்து விடுபட்ட நடிகை கஸ்தூரி, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இஸ்லாம் பெண்கள் அணியும் பர்தா உடை அணிந்திருப்பதோடு, அந்த உடையை எதற்காக அணிந்திருக்கிறார், என்ற விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.

 

இதையடுத்து, அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள், கஸ்தூரி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரோ, என்ற குழப்பம் அடைவதோடு, அவரிடமே சில ரசிகர்கள் இது குறித்து கேட்டும் வருகின்றனர்.

 

இதுவரை இந்த பர்தா விவகாரத்திற்கு பதில் சொல்லாத கஸ்தூரி, விஷயம் பெரிதானவுடனே பதில் சொல்வாரோ என்னவோ.

 

 

View this post on Instagram

As salam aleikum

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on May 4, 2019 at 11:17am PDT