Jun 11, 2020 06:49 AM

ஆளே மாறிப்போன ‘ரேனிகுண்டா’ சனுஷா! - ஷாக்கிங் புகைப்படம் இதோ

ஆளே மாறிப்போன ‘ரேனிகுண்டா’ சனுஷா! - ஷாக்கிங் புகைப்படம் இதோ

‘ரேனிகுண்டா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சனுஷா. இவர் பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், இளம் வயதிலேயே கதாநாயகியாகவும் களம் இறங்கினார். ‘ரேனிகுண்டா’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ’நந்தி’, ‘எத்தன்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்த சனுஷா, பிறகு  தங்கை வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

 

இதற்கிடையே, தமிழில் அவருக்கு வாய்ப்பு குறைந்ததால் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தியவர், தமிழில் இறுதியாக 2017 ஆம் ஆண்டு வெளியான ‘கொடிவீரன்’ படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.  கடந்த ஆண்டு வரது நடிப்பில் ‘ஜெர்ஸி’ என்ற தெலுங்குப் படம் மட்டுமே வெளியானது.

 

தற்போது பட வாய்ப்புகள் இன்றி வீட்டில் இருக்கும் சனுஷா, அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், அம்மணி அளவுக்கு அதிகமாக வெயிட் போட்டு குண்டாகிவிட்டார்.

 

பொதுவாக வாய்ப்பு இல்லாத நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், சனுஷா, தனது உடல் எடை அதிகரித்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பதை வியப்பை ஏற்படுத்துகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Actress Sanusha

 

Actress Sanusha