Sep 30, 2019 05:56 AM

வெளியேற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் ரிட்டர்ன்! - குஷியில் பிக் பாஸ் வீடு

வெளியேற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் ரிட்டர்ன்! - குஷியில் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 3 இந்த வாரத்தோடு முடிவடைய உள்ளது. இன்று 99 வது நாளை நெருங்கி விட்டது. இதற்கிடையே கவின் மற்றும் தர்ஷன் வெளியேற்றம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்த நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சியாக வெளியேற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று எண்ட்ரியாகிறார்கள்.

 

இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 3 டைடிலை யார் வெல்லப் போகிறார், என்பது தெரிந்துவிடும் நிலையில், இன்று ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா மற்றும் ரேஷ்மா ஆகியோர் மீண்டும் வீட்டுக்குள் எண்ட்ரியாகியிருக்கிறார்கள்.

 

இருவரும் பலவித பரிசுப் பொருட்களை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்குவதோடு அவர்களை கட்டிப்பிடித்து கொண்டாடுகிறார்கள். இந்த பழைய போட்டியாளர்களின் வருகையால், பிக் பாஸ் வீடும், போட்டியாளர்களும் செம குஷியாகிவிடுகிறார்கள்.