Jul 08, 2019 03:36 PM

மதுமிதாவுக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் தொடரும் கலகம்!

மதுமிதாவுக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் தொடரும் கலகம்!

பிக் பாஸ் சீசன் 3 யின் எலிமினேஷன் ரவுண்ட் தொடங்கிவிட்டது. கடந்த வார்ம் எல்மினேஷனில் பாத்திமா பாபு, மதுமிதா, சாக்‌ஷி அகர்வால், சரவணன், கவின் ஆகியோரது பெயர்கள் இருந்த நிலையில், மதுமிதா வெளியேற வேண்டும் என்று அபிராமி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் எதிர்ப்பார்த்தனர்.

 

இதற்கிடையே, பாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாத்திமா பாபு, வெளியே வந்ததும் மதுமிதா மட்டுமே அவராக இருக்கிறார். மற்றவர்கள் நடிக்கிறார்கள், என்று வெளிப்படையாக பேசினார்.

 

இந்த நிலையில், மதுமிதாவுக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கலகம் தொடங்கிவிட்டது. அவர் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டது யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால், அவரை மீண்டும் குறி வைக்கும் சாக்‌ஷி, அபிராமி ஆகியோர் மதுமிதா குறித்து தாறுமாறாக பேசுவதோடு, இன்றைய எப்பிசோட்டில் அவரை வைத்து பெரிய பிரச்சினையை உருவாக்கவும் திட்டமிட்டிருப்பது, இன்றைய புரோமோவில் தெரிகிறது.

 

இதோ அந்த புரோமோ,