Jun 04, 2019 11:48 AM

அஜித் பற்றி பரவும் வதந்தி! - முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்

அஜித் பற்றி பரவும் வதந்தி! - முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்

சர்ச்சைகளில் சிக்காத நடிகர்களில் முக்கியமானவராக இருக்கும் அஜித், தான் நடிக்கும் படங்களின் விழாக்களிலேயே பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். இருப்பினும், அவரைப் பற்றி அவ்வபோது பல செய்திகளும் சில வதந்திகளும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

 

அந்த வகையில், அஜித் பற்றி சமீபத்தில் வெளியான வதந்தி ஒன்றுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரெடியாகிக் கொண்டிருக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் அஜித் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு காரணம், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஒரிஜினல் வெஷனான இந்திப் படம் ‘பிங்க்’ல் அஜித்தின் வேடத்தில் நடித்திருந்த அமிதாப் பச்சன், அப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதனால் தான், அஜித்தும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக சிலர் கொளுத்தி போட்டுவிட்டார்கள்.

 

Yuvan Shankar Raja

 

இந்த தகவல் வைரலான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, ”அஜித் பாடல் எதுவும் பாடவில்லை. படத்தின் முதல் கட்ட எடிட்டிங் முடிந்திருப்பதால், தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இசை கலைஞர்கள் சிலருடன் இணைந்து அஜித் படம் பார்த்தார். மற்றபடி பாடல் எல்லாம் அவர் பாடவும் இல்லை, அதுபற்றி நாங்கள் பேசவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.