Sep 14, 2019 05:42 AM

விஜய் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி! - ’பிகில்’ ரிலீஸில் திடீர் மாற்றம்

விஜய் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி! - ’பிகில்’ ரிலீஸில் திடீர் மாற்றம்

விஜய் நடிப்பில் தீபாவளி வெளியாக இருக்கும் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19 ஆம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பல சர்பிரைஸ் நிகழ்ச்சிகளை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

 

இந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாக இருந்த ‘பிகில்’ ரிலீச் தேதி ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டது. அதாவது தீபாவளி நாளான அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், இரண்டு நாட்களுக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்கள்.

 

தற்போது இந்த தேதியை மற்றி, ஒரு நாள் முன்னதாகவே, அதாவது அக்டோபர் 24 ஆம் தேதியே, (விழாயக்கிழமைய) படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள். 

 

‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளியானதால் ரசிகர்கள் தீபாவளியுடன் படத்தையும் கொண்டாடினார்கள். ஆனால், இந்த முறை தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக படம் வெளியாக இருப்பதால், தீபாவளி விஜயின் தீபாவளியாக இருக்கப் போவதில்லை. நிச்சயம் இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் நிகழ்வாகவே இருக்கிறது.

 

பண்டிகை நாட்களில் தனது படம் வெளியாவதை விரும்பும் விஜய்க்கு, ’பிகில்’ ரிலீஸ் தேதியில் நடந்த இந்த திடீர் மாற்றம் ஏமாற்றமாக அமைந்தாலும், தொடர் விடுமுறையை குறிவைத்து தயாரிப்பாளர் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு கட்டுப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.