Jun 06, 2019 01:18 PM

காவலரை அடித்த சல்மான் கான்! - வைரலாகும் வீடியோ

காவலரை அடித்த சல்மான் கான்! - வைரலாகும் வீடியோ

பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘பாரத்’ என்ற படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய முதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற்ற நிலையிலும், பாரத் படத்தின் வசூல் குறையவில்லை.

 

இந்த நிலையில், நேற்று தியேட்டருக்கு விசிட் அடித்த சல்மான் கான், ஒரு தியேட்டருக்கு சென்ற போது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டது. அப்போது அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் ரசிகர்களை சல்மான் கான் அருகே நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். 

 

அதில் ஒருவர், குழந்தையிடம் தவறாக நடந்துக் கொண்டார். இதை கவனித்த சல்மான் கான், அந்த இடத்தில் நின்று அந்த காவலர் கண்ணத்தில் அறைந்து அவரை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

 

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,