Jun 03, 2019 03:43 AM

5 நிமிடத்திற்கு சமந்தா வாங்கிய சம்பளம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

5 நிமிடத்திற்கு சமந்தா வாங்கிய சம்பளம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்தால் தான் திருமணத்தைப் பற்றியே யோசிப்பார்கள். ஆனால், நடிகை சமந்தாவோ தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, சூர்யா, விஜய் என்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வந்த போதே, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்கும் சமந்தா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் ஆகி வருவதால், அவருக்கு திருமணத்திற்குப் பிறகும் மவுசு குறையவில்லை.

 

இந்த நிலையில், தனது மாமனாரும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான நாகர்ஜூவாவின் ‘மன்மதுடு 2’ படத்தில் சமந்தா நடித்து வருகிறார். ஆனால், அவர் அப்படத்தில் வெறும் 5 நிமிடம் மட்டுமே வரும் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

 

இந்த 5 நிமிட காட்சிக்காக சமந்தா வாங்கிய சம்பளம் ரூ.35 லட்சமாம். சமந்தாவின் இந்த சம்பள உயர்வை குறித்து அறிந்த தெலுங்கு திரையுலகம் பேரதிர்ச்சியடைந்துள்ளது.

 

விசாரித்ததில், தனது படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகி வருவதால் சமந்தா, தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். அதன் ஆரம்பம் தான் 5 நிமிட காட்சிக்காக அவர் வாங்கிய சம்பளமாம்.

 

அப்போ முழுப்படத்திலும் ஹீரோயினாக நடித்தால் எவ்வளவு சம்பளம் கேட்பாரோ, என்று தயாரிப்பாளர்கள் பலர் இப்பவே கணக்கு போடவும் தொடங்கி விட்டார்களாம்.