திருப்பதியில் தமிழ் ரசிகரை எச்சரித்த சமந்தா! - வைரல் வீடியோ இதோ

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தாவின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் ஹீரோயினாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதே படத்தில் நயன்தாராவும் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார்.
சமந்தா தான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து செல்வது வழக்கும். அந்த வகையில், அவர் நடிப்பில் வெளியான ‘ஜானு’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து சென்றார்.
சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை மீது நடக்கும் போது, அவரை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர், அவருடன் நடந்து சென்றதோடு, அவரை புகைப்படம் எடுத்தவாறு செல்ல, கோபமடைந்த சமந்தா, அவரை “இங்க பாரு நடந்தா ஒழுங்கா நட, இந்த போட்டோ எடுக்குற வேலலாம் வேணாம்” என்று எச்சரித்தார்.
சமந்தாவின் இந்த எச்சரிக்கை வீடியோ தெலுங்கு மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ,