சமீரா ரெட்டிக்கு குழந்தை பிறந்தது! - புகைப்படம் இதோ

சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டி, தொடர்ந்து அஜித், விஷால், மாதவன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர், பாலிவுட் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்தவர், திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாக இருந்ததால் தான், தான் நடிப்பதை நிறுத்தியதாக சமீரா பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்தும் கூட சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக, அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் போதே நீச்சல் உடை உள்ளிட்ட பல கவர்ச்சியான உடைகளில் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், சமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தனக்கு குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் சமீரா ரெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சமீரா ரெட்டிக்கு ஏற்கனவே ஒரு ஆண் பிள்ளை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.