பிக் பாஸ் சனம் ஷெட்டிக்கு நடந்த ரகசிய திருமணம்? - ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நான்காவது சீசன் நேற்று முன் தினம் நிறைவடைந்தது. ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தை பாலாவும், மூன்றாம் இடத்தை ரியோவும் பிடித்தனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4-ன் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டிக்கு ரகசிய திருமணம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் சனம் ஷெட்டி, பிக் பாஸ் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமான தர்ஷனை காதலித்ததும், பிறகு தர்ஷன் கழட்டிவிடப்பட்டதால், அவர் காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்த பிரச்சினையால சில மாதங்கள் மீடியா வெளிச்சத்தில் பயணித்தவர், பிறகு இப்பிரச்சினை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். இதன் பிறகு பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக சனம் ஷெட்டி கலந்துக் கொண்டார். ஆனால், அவர் போட்டி தொடங்கிய சுமார் 30 நாட்களுக்குப் பிறகு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கான விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்தனர். அதன்படி சனம் ஷெட்டியும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். ஆனால், அவரிடம் முன்பை காட்டிலும் பல மாற்றங்கள் தெரிந்தது.
எப்போதும் புடவையில் இருந்த சனம் ஷெட்டி, திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் குங்கும் வைப்பது போல, தனது நெற்றியின் மேல் பகுதியில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தார். இதை கவனித்தவர்கள் அவருக்கு திருமணமாகி விட்டதோ!, என்று சந்தேகப்பட்டனர்.
தற்போது, சனம் ஷெட்டியின் குங்குமம் விவகாரம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. சனம் ஷெட்டிக்கு ரகசியமாக திருமணம் நடந்திருக்கலாம், என்றும் கூறப்படுகிறது.
ஆனால், கர்நாடகா பெண்களிடம் திருமணம் ஆகாமலும், அப்படி நெற்றியில் குங்குமம் வைக்கும் பழக்கம் உள்ளதாம். அந்த வகையில் சனம் ஷெட்டி நெற்றியில் குங்குமம் வைத்திருக்கலாம், என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இதில் எது உண்மை என்று சனம் ஷெட்டி தான் கூற வேண்டும்.