Feb 24, 2020 05:36 AM

சனம் ஷெட்டி வெளியிட்ட படுக்கையறை வீடியோ! - கடுப்பான தர்ஷன்

சனம் ஷெட்டி வெளியிட்ட படுக்கையறை வீடியோ! - கடுப்பான தர்ஷன்

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி காதல் முறிவு பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. தர்ஷன், தான் உண்டு தனது வேலை உண்டு, என்று இருந்தாலும், சனம் ஷெட்டி தர்ஷனை விடாமல் துறத்துவதோடு, சில புகைப்படங்களையும் அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறினாலும், இனி தனது வாழ்க்கையின் சனம் இல்லை, என்று அடித்துக் கூறிய தர்ஷன், படங்களில் ஹீரோவாக நடிக்கும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், சனம் ஷெட்டி தர்ஷனுடன் இணைந்து நடித்த விளம்பரப் படம் ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு, அந்த விளம்பரப் படத்தை எடுத்தவறுக்கு நன்றி கூறியுள்ளார்.

 

இந்த விளம்பரப் படத்தில் சனம் ஷெட்டியும், தர்ஷனும் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், சனம் ஷெட்டி எதையோ மறைமுகமாக சொல்லி, தர்ஷனை சீண்டியிருக்கிறார். 

 

சனம் ஷெட்டியின் இத்தகைய நடவடிக்கையால் தர்ஷன் ரொம்பவே அப்செட்டாகி வருகிறாராம்.

 

இதோ அந்த வீடியோ,