Aug 04, 2019 04:58 AM

முடிந்தது ‘சங்கத்தமிழன்’ படப்பிடிப்பு! - தொடங்கியது டப்பிங்

முடிந்தது ‘சங்கத்தமிழன்’ படப்பிடிப்பு! - தொடங்கியது டப்பிங்

எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முந்தைய தலைமுறை முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்ததோடு, தற்போதைய தலைமுறையின் முன்னணி ஹீரோக்களான விஜய், தனுஷ், விஷால் ஆகியோரை வைத்தும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் பி.நாகி ரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் சங்கத்தமிழன் படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

 

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் படத்தில் நாசர்,  சூரி,  அசுதோஷ் ராணா, , ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன்,  மாரிமுத்து,  ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான்  போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

 

இளம் இசையமைப்பாளர்களான விவேக் - மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

Vijay Sethupathi in Sangathamizhan Dubbing

 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் காரைக்காலில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது.