Jul 12, 2019 12:28 PM

ஹீரோயின்களை கதற விடும் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி!

ஹீரோயின்களை கதற விடும் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி!

தமிழகத்தின் முன்னணி சில்லறை ஆடை விற்பனை நிறுவனமான சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளரான அருள், சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்ததோடு நிற்காமல், கோலிவுட்டில் ஹீரோவாகவும் கால் பதிக்க உள்ளார். இதற்கான முன்னோட்டம் தான் அவரது விளம்பரப் படங்கள்.

 

தற்போது, வீட்டிலேயே நடிப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ரூ.30 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாம். விளம்பரப் படங்களில் அருளை ஆடவிட்ட இரட்டையர் இயக்குநர்கள் ஜெடி - ஜெர்ரி தான் இந்த படத்தை இயக்கப் போகிறார்கள்.

 

அருளுக்கு ஜோடி தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இயக்குநர் ஜெடி - ஜெர்ரி, முதலில் நயன்தாராவை தான் அனுகியிருக்கிறார்கள். கேட்கும் சம்பளத்தை ஒரு பைசா கூட குறையாமல் பணமாகவே கொடுப்பதாக கூறியிருக்கியிருக்கிறார்கள். ஆனால், நயன்தாராவோ நோ என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் பேசவில்லையாம்.

 

Saravana Stores Arul and Nayanthara

 

சரி போகட்டும், அருளுடன் விளம்பரப் படங்களில் நடித்தவர்களிடமே போகலாம் என்று தமன்னா, ஹன்சிகா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் சென்றால், அவர்களோ விளம்பரப் படம் வேறு, திரைப்படம் வேறு, என்று கூறி அருளுடன் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்கள்.

 

Saravana Stores Arul and Shreya

 

அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும், என்று யாராவது கூறினாலே அதைக்கேட்டு கதறியபடி தமிழ் ஹீரோயின்கள் ஓட்டம் பிடிக்க, அவர்களால் கடுப்பான அருள் அண்ணாச்சி தற்போது கோலிவுட் ஹீரோயின்களை கடுப்பேத்துவதற்காக, பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினை தனது படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டாராம்.

 

எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுத்து அவரை தனது படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்வதில் தான் தற்போது அருள் அண்ணாச்சி தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.