நடிகர் துரை சுதாகாரின் மகனின் 3ம் வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட சசிகுமார்!
தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் துரை சுதாகர். முதல் படத்திலேயே நாயகனாக அறிமுகமாகி மக்களால் பப்ளிக் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் துரை சுதாகர், தயாரிப்பாளர், ஹீரோ என்று ஆரம்பத்திலேயே கோலிவுட்டில் அதிரடி காட்டினாலும், தற்போது நல்ல வேடங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
‘களவாணி 2’, ‘டேனி’, ‘மீண்டும்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டியவர் ‘ஆண்டி இண்டியன்’, ‘க/பெ ரணசிங்கம்’ போன்ற படங்களில் குணச்சித்திர நடிப்பால் பாராட்டு பெற்றார்.
கடந்த ஆண்டு சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘பட்டத்து அரசன்’ படத்தில் ராஜ்கிரணின் இளையமகன் வேடத்தில் நடித்து பெரிதும் பாராட்டு பெற்ற பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இயக்குநர் சரவணன் உள்ளிட்ட பல இயக்குநர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக உயர்ந்து வருவதோடு, நல்ல மனிதர் என்று பெயர் எடுத்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தற்போது திரையுலகினர் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக தஞ்சை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தால் படக்குழுவினருக்கு முதல் நபராக உதவி செய்வது இவராகத்தான் இருக்கும். இதனால் நடிகர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி துரை சுதாகர் அவர்கள் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

இந்த நிலையில், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் மகன் நண்பனுக்கு இன்று (பிப்ரவரி 8) 3வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டு, நெருங்கிய உறவினர்களோடு சேர்ந்து நடிகர் துரை சுதாகர், தனது மகன் நண்பனின் பிறந்தநாளை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் கலந்துக்கொண்டு, நண்பனுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் நல்ல மனதுக்காக அவரது மகனை நள்ளிரவு வாழ்த்த வேண்டும் என்ற முடிவு செய்த சசிகுமார், யாரிடமும் சொல்லாமல் சர்பிரைஸாக தஞ்சைக்கு சென்று நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டதால், பப்ளிக் ஸ்டாரின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும், நண்பனின் பிறந்தநாள் தகவல் அறிந்து திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

