May 10, 2019 10:20 AM

சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு முடிந்தது!

சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு முடிந்தது!

ரெதான் நிறுவனத்தின் இந்தர்குமார் ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. 

 

தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து, SR.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

 

1990 - 1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா  செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, தீபா ராமனுஜம், சென்றாயன்,  மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் துவங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் பகுதிகளில் நடந்து, இனிதே பொள்ளாச்சியில் நிறைவு பெற்றது.  

 

Kombu Vacha Singamda

 

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ படத்தொகுப்பில், ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, மைக்கேல்ராஜ் கலையில், யுகபாரதி, மோகன்ராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுத, மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்துக் கொள்ள, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் SR.பிரபாகரன். தயாரிப்பு – ரெதான்’ இந்தர்குமார்.