Mar 03, 2019 01:38 PM

’சத்ரு’ மூலம் இன்னொரு சூப்பர் ஹிட்டுக்கு காத்திருக்கும் கதிர்!

’சத்ரு’ மூலம் இன்னொரு சூப்பர் ஹிட்டுக்கு காத்திருக்கும் கதிர்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கதிர், ‘பரியேறும் பெருமாள்’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதோடு, நல்ல நடிகர் என்ற பெயரையும் எடுத்திருக்கிறார். இதனால், இவர் நடிக்கும் படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

இந்த நிலையில், கதிர் நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘சத்ரு’ வரும் மார்ச் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

ஆர்.டி.இன்பினிட்டு டீல் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை நவீன் நஞ்சுண்டன் இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயினாகசிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். ‘ராட்டினம்’ பட ஹீரோ லகுபரன் வில்லனாக நடித்திருக்கிறார்.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கதிர், சிருஷ்டி டாங்கே, லகுபரன், இயக்குநர் நவீன் நஞ்சுடண், தயாரிப்பாளர் ரகுகுமார், இசையமைப்பாளர் அம்ரீஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசியவர்கள், இப்படம் நிச்சயம் சூப்பட் ஹிட் படம், என்று நம்பிக்கையோடு கூறினார்கள். அதேபோல் படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டது. அக்காட்சிகள் முழு படத்தையும் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருந்தது.

 

இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் படம் குறித்து பேசுகையில், ”இந்த படத்தில் கதிர் கேரக்டர்தான் போலீஸ். ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர் 24 மணி நேரத்தில் எப்படி தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

 

இந்த படத்தை ரொம்பவே கஷ்ட்டப்பட்டு தான் எடுத்திருக்கிறோம். ஹீரோ கதிர் ரொம்பவே சப்போர்ட்டாக இருக்கிறார். தற்போது படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. படத்தை ‘ராட்சசன்’ தயாரிப்பாளர் டில்லி பாபு வெளியிடுவது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. ‘சத்ரு’ கதிருக்கு ‘பரியேறும் பெருமாள்’ போன்ற மாபெரும் வெற்றியை நிச்சயம் கொடுக்கும்.” என்றார்.

 

ஹீரோயின் சிருஷ்டி டாங்கே பேசும் போது, “இந்த படத்தின் முழு கதையையும் கேட்ட போது, ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு தான் ஸ்கோப் இருப்பதை புரிந்துக் கொண்டேன். இருந்தாலும் இதில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம், இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி படத்தில் நாமும் இருப்போம் என்பது தான். ஹீரோவாக நடித்த கதிரும், வில்லனாக நடித்த லகுபரனும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். இப்படத்திற்கு பிறகு லகுபரனுக்கு ஏராளமான வாய்ப்புகள் வரும்.” என்றார்.

 

கதிர் பேசும் போது, “இந்த படத்தின் கதையை கேட்ட போது லகுபரனின் கதாபாத்திரம் மீது தான் எனக்கு ஆர்வமாக இருந்தது. அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் பவர் புல்லாக இருக்கும். அவருடன் நடித்த மற்ற மூன்று பேரது வேடமும் சிறப்பாக வந்திருக்கிறது. எந்த இடத்திலும் போராடிக்காத வகையில் திரைக்கதையை நவீன் விறுவிறுப்பாக கையாண்டிருக்கிறார். ரசிகர்களுக்கு படம் நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.