Aug 05, 2018 01:02 PM

வரலட்சுமி படத்தை பார்த்து வியந்த வினியோகஸ்தர்! - மொத்தமாக வாங்கினார்

வரலட்சுமி படத்தை பார்த்து வியந்த வினியோகஸ்தர்! - மொத்தமாக வாங்கினார்

நல்ல திரைப்படங்களாக இருந்தாலும் அதை சரியான முறையில் வெளியிட முடியாமல் பல படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றன. அந்த வகையில் படங்களின் வெற்றிக்கு வினியோகஸ்தர்கள் ஆக்சிஜனைப் போல ரொம்ப முக்கியமானவர்கள்.

 

அந்த வரிசையில், தொடர்ந்து நல்ல திரைப்படங்களை கண்டுபிடித்து அவற்றை நல்ல முறையில் வெளியிட்டு வெற்றிப் படமாக்குவதில் கெட்டிக்காரர், என்று பெயர் எடுத்திருக்கிறார் கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி.

 

‘தப்பு தண்டா’ படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமான சத்யமூர்த்தி, சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘கோலிசோடா 2’ போன்ற படங்களை வாங்கி வெளியிட்டிப்பவர் தற்போது வரலட்சு மடிப்பில் உருவாகியுள்ள ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

 

Sathyamoorthy

 

டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சர்ஜுன் இயக்கியிருக்கிறார். இவர் யு டியூபில் பிரபலமான ‘மா’ மற்றும் ’லஷ்மி’ ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார்.

 

மேலும், நயந்தாராவை வைத்து படம் ஒன்றையும் இயக்கும் சர்ஜுன், தனது முதல் படமான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படம் குறித்து கூறுகையில், “இது கிரைம் திரில்லர் படம்...’எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்.

 

சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம்.” என்றார்.

 

இப்படத்தை சமீபத்தில் பார்த்த சத்யமூர்த்தி, படத்தை வெகுவாக பாராட்டியதோடு மொத்தமாக வாங்கி ரிலீஸ் செய்ய முடிவு செய்தவர், இம்மாதம் வெளியிடுகிறார்.

 

மேலும், யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தை தயாரித்து முடித்துவிட்டார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.