Feb 13, 2019 10:00 AM

பிரியா பவானி சங்கரின் காதலர் குறித்து வெளியான ரகசியம்!

பிரியா பவானி சங்கரின் காதலர் குறித்து வெளியான ரகசியம்!

செய்தி வாசிப்பாளராக மீடியாவில் நுழைந்த பிரியா பவானி சங்கர், சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியா பவானி சங்கர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு, பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரப் போகிறார்.

 

இதற்கிடையே, அவ்வபோது பிரியா பவானி சங்கரின் காதல் விவகாரம் சமூக வலைதளங்களை பரவி பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. ஏன், அவர் நடிப்பதையே விட்டுவிட்டு திருமணம் செய்துக் கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, என்று சுருக்கமாக கூறிவிட்டு, தனது வேலையில் பிஸியாகிவிடுகிறார் பிரியா.

 

தனது காதல் குறித்து பல தகவல்கள் பரவினாலும், பிரியா மட்டும் தனது காதல் மற்றும் காதலர் குறித்து இதுவரை எங்கேயும், எதுவும் சொன்னதில்லை.

 

இந்த நிலையில், பிரியா பவானி சங்கரின் காதலர் குறித்த சில ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவரது காதலர் பெயர் ராஜ்வேல். 

 

Priya Bhavani Shankar and Rajvel

 

சென்னை வண்டலூரில் உள்ள கிரெசண்ட் கல்லூரியில் பிரியாவுடன் படித்த ராஜ்வேல், அப்போது இருந்தே பிரியாவுடன் நட்பாக பழகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியிருக்கிறது. அவரை பிரியாவின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடித்துவிட்டதாம். கல்லூரி படிப்பை முடித்ததும் பிரியா மீடியா பக்கம் வந்துவிட, ராஜ்வேல் ஐடி துறைக்கு சென்றுவிட்டாராம். தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் ராஜ்வேல், பிரியாவை தனது ஸ்பெஷல் என்று பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.