Oct 31, 2019 03:30 AM

’லட்சுமி’ குறும்பட நடிகைக்கு நடந்த ரகசிய திருமணம்!

’லட்சுமி’ குறும்பட நடிகைக்கு நடந்த ரகசிய திருமணம்!

‘லட்சுமி’ என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமானவர் லட்சுமி பிரியா சந்திரமவுலி. இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘முன்தினம் பார்த்தேனே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், ‘சுட்ட கதை’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

 

தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தாலும் லட்சுமி பிரியாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது ‘லட்சுமி’ என்ற குறும்படம் தான். நடுத்தர குடும்பத்து பெண்களில் பாலியல் சுதந்திரம் குறித்து பேசும் இக்குறும்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. சர்ச்சையான இந்த குறும்படத்தின் மூலம் பிரபலமான லட்சுமி பிரியா சந்திரமவுலி, எழுத்தாளர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

 

Lakshmi Short Film

 

நாடக நடிகையான லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கு தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் வகையில் எந்த படங்களும் அமையாத நிலையில், அவர் பிரபல எழுத்தாளர் வெங்கட்ராகவன் ஸ்ரீனிவாசனை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இந்த திருமணம் குறித்து எந்த தகவலை அவர் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது மீடியாக்கள் மூலம் இது வெளியாகியுள்ளது.