Jan 04, 2020 04:08 PM

நயன்தாரவை சுற்றி பாதுகாப்பு வளையம்! - போட்டது யார் தெரியுமா?

நயன்தாரவை சுற்றி பாதுகாப்பு வளையம்! - போட்டது யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு வலம் வருகிறார். முன்னணி ஹீரோக்கள் படங்களின் முதல் தேர்வாக இருக்கும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயனை ஹீரோயினாக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை பேரம் பேசாம் வழங்குவதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிருவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக நயன்தாராவுக்கு, தற்போது அவர் வாங்கும் சம்பளத்தை இரண்டு மடங்காக வழங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே, நயன்தாரா நடித்து வந்த ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். இதற்கு காரணம், இரண்டு மடங்கு சம்பளம் வாங்கிய மூக்குத்தி அம்மன் படத்தை விரைவாக முடித்துக் கொடுத்துவிட்டு, அந்த பணத்தில் நெற்றிக்கண் படப்பிடிப்பு நடத்தலாம், என்று நயனும், சிவனும் முடிவு எடுத்திருக்கிறார்களாம்.

 

இந்த நிலையில், ‘நெற்றிக்கண்’ படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன், நயன்தாராவை சுற்றி பாதுகாப்பு வளையம் ஒன்றை போட்டு வைத்திருந்தாராம். யாராவது நயனை குறுகுறுவென்று பார்த்தார்கள் என்றால், உடனே அவர்கள் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படுவதோடு, படத்தில் இருந்தே தூக்கப்பட்டு விடுவார்களாம்.

 

மேலும், படத்தில் நடிப்பவர்கள் மற்றும் பிற பணியில் இருப்பவர்கள், தங்களது வேலை முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் இருக்க கூடாதாம். அப்படி இருக்க விரும்பினால், அவர்களின் வேலையும் காலியாம்.

 

Nayanthara and Vignesh Shivan

 

நயனை சுற்றி சிவன் போட்ட இந்த பாதுகாப்பு வளையம் குறித்து நயனுக்கு எதுவும் தெரியாதாம். தெரிந்தால், நயன்தாராவை பார்ப்பவர்களை அப்புறப்படுத்தப்படுவது போல விக்னேஷ் சிவனும், நயன்தாரா வாழ்க்கையில் இருந்து அப்புறப் படுத்தப்படலாம், என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.