Jun 26, 2019 10:07 AM

செல்வராகவனின் அடுத்தப் படம்! - ஹீரோ இவர் தான்

செல்வராகவனின் அடுத்தப் படம்! - ஹீரோ இவர் தான்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய ‘என்.ஜி.கே’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், சூர்யா நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஓபனிங் பெற்ற படம் என்ற பெருமையை பெற்றது.

 

இந்த நிலையில், செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். அவர் அடுத்த படத்திற்காக தனுஷுடன் இணைய இருக்கிறார். தனுஷை வைத்து ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் செல்வராகவன் தற்போது ஐந்தாவது முறையாக தனுஷுடன் இணைகிறார்.

 

Dhanush

 

இந்த தகவலை நடிகர் தனுஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.