Feb 10, 2020 06:18 AM

’செம்பருத்தி’ சீரியல் நடிகைக்கு நடந்த திடீர் திருமணம்!

’செம்பருத்தி’ சீரியல் நடிகைக்கு நடந்த திடீர் திருமணம்!

சினிமா மற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் சிலர் திடீரென்று திருமணம் செய்துக் கொள்கிறார்கள். தற்போது பிரபல சீரியலான ‘செம்பருத்தி’ நடிகையும் திடீரென்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலின் நாயகன் ஆதியும், பார்வதியும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது திருமணத்தை ஆதியின் அம்மா அகிலாண்டேஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? என்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகரித்து வருகிறது.

 

இந்த நிலையில், இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பாரதா நாயுடுவுக்கும், பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

எளிமையான முறையில் திருவண்ணாமலையில் பாராதா நாயுடு - பரத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தவித அறிவிப்பும் இல்லாமல், பாரதா நாயுடு திரீரென்று திருமணம் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதோ அவரது திருமண புகைப்படம்,