May 11, 2019 11:57 AM

பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவுக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவுக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபலமான சீரியல் நடிகர்களில் அமித் பார்கவும் ஒருவர். ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

இதற்கிடையே, இனி சீரியல்களில் நடிக்கப் போவதில்லை, புதுவித வேலைகள் செய்ய இருக்கிறேன், என்று சமீபத்தில் அமித் பார்கவ் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த அமித் பார்கவின் மனைவி சிவரஞ்சனிக்கு கடந்த 7 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலையும், தனது குழந்தையின் புகைப்படத்தையும் அமித் பார்கவ் வெளியிட்டுள்ளார்.

 

இதோ அந்த புகைப்படம்,