Jul 20, 2018 10:38 AM

45 வயதில் கல்யாணம், மாப்பிள்ளை யார்? - மனம் திறந்த சீரியல் நடிகை ஸ்ருதி!

45 வயதில் கல்யாணம், மாப்பிள்ளை யார்? - மனம் திறந்த சீரியல் நடிகை ஸ்ருதி!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அழகி்' தொடரில் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ருதி, சின்னத்திரை தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

 

மலையாளம் சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான ஸ்ருதி ராஜ், 1996 ஆம் ஆண்டு வெளியான விஜயின் மாண்புமிகு மாணவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

 

Shruthi Raj

 

தற்போது தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதி ராஜுக்கு தற்போது 45 வயதாகிறது. இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் ஸ்ருதியிடம், எப்போது கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறீர்கள், என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப் பட்டது.

 

அதற்கு பதில் அளித்த ஸ்ருதி,  இதுவரை என் வாழ்க்கையில் எதையும் பிளான் செய்தது கிடையாது. அப்படி பிளான் செய்தாலும் அது சரியாக நடந்தது இல்லை. கல்யாணமும் அப்படி தான் எனக்கு எந்த பிளானும் இல்லை. வீட்டில் பார்த்துக் கொள்வார்கள், என்று தெரிவித்துள்ளார்.

 

Shruthi Raj

 

45 வயதாகியும் கல்யாணம் குறித்து பிளான் எதுவும் செய்யாமல் இருப்பது ஸ்ருதி மட்டும் அல்ல, இவரைப் போன்ற நிலையில் பல நடிகைகள் இருக்கிறார்கள் என்பது தான் பெரும் சோகம்.