Aug 05, 2018 12:13 PM

நடிகை ஸ்ரிதிகாவுக்கு கல்யாணம்? - மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்

நடிகை ஸ்ரிதிகாவுக்கு கல்யாணம்? - மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்

’நாதஸ்வரம்’ சீரியல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான நடிகை ஸ்ரிதிகா சில திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும், தற்போது அவரது கவனம் முழுவதும் சீரியல் மீது தான் இருக்கிறது.

 

இந்த நிலையில், டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஸ்ரிதிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சக நடிகைகள் கூற, அரங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும், அவரிடம் எப்போ கல்யாணம்...எப்போ கல்யாணம், என்று கேட்க தொடங்கி விட்டார்கள்.

 

அதுமட்டும் அல்ல, மாப்பிள்ளை யார்? என்றும் கேட்க, ஸ்ரிதிகா வெட்கத்தில் சிரித்தபடியே இருக்க, ஆஹா கல்யாணம் மேட்டர் நிஜம் தான் போல, என்று அனைவரும் நம்பிவிட்டனர்.

 

ஆனால், தனது கல்யாணம் குறித்து பேசிய ஸ்ரிதிகா, தற்போது கல்யாணம் குறித்து எதுவும் உறுதியாகவில்லை. அப்படி உறுதியானால் நிச்சயமாக நான் அனைவருக்கும் தெரிவிப்பேன், கல்யாணம் மட்டும் அல்ல மாப்பிள்ளை கூட இன்னும் முடிவாகவில்லை, குல தெய்வம் சீரியலில் எப்படி எனது கல்யாண விஷயத்தில் சஸ்பென்ஸ் இருந்ததோ அதுபோல நிஜத்திலும் சஸ்பென்ஸ் இருக்கும், என்று கூறினார்.

 

முன்னதாக, இந்த நிகழச்சியில் நடிப்பு உள்ளிட்ட தொழில் துறையை தவிர்த்து வாழ்க்கையில் பெண்களின் ரோலில் எது பிடிக்கும் என்று போட்டியாளர்களிடம் கேட்ட போது, ஸ்ரிதிகா மனைவி என்ற ரோல் ரொம்பவே ஸ்பெஷல், அது தான் தனக்கு பிடிக்கும், என்று கூறினார்.