சீரியல் நடிகை யாஷிகா கொலையில் மரமம்! - அம்மா பரபரப்பு புகார்

சமீபத்தில் சென்னையில் தற்கொலை செய்துக் கொண்ட சீரியல் நடிகை யாஷிகா, தற்கொலை செய்துக் கொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார், என்று அவரது அம்மா போலீசிடம் புகார் அளித்துள்ளதால், இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல சீரியல்களில் நடித்த யாஷிகா, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். காதல் தோல்வியால், சமீபத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
ஆனால், யாஷிகாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை, என்று அவரது அம்மா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறிய யாஷிகாவின் அம்மா, என்னுடைய மகள் யாஷிகா தற்கொலை செய்யவில்லை, அவருடைய காதலர் அரவிந்த் தான் கொலை செய்தார். போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட கடிதம் என் மகள் எழுதியது இல்லை.
50 சவரன் என்னுடைய மகளின் தங்கம் காணவில்லை. நான் வருவதற்கு முன் என் மகளின் இறுதி சடங்கு முடிந்துவிட்டது. இன்னொரு விஷயம் என்னவென்றால் என் மகள் அரவிந்த்தால் கர்ப்பமாக இருந்தால் அதையும் அவர்கள் கலைக்க சொல்லி கொடுமை செய்தார்கள், என்று தெரிவித்துள்ளார்.