Feb 09, 2019 10:11 AM

சீரியல் தம்பதி தற்கொலை முயற்சி! - ரசிகர்கள் அதிர்ச்சி

சீரியல் தம்பதி தற்கொலை முயற்சி! - ரசிகர்கள் அதிர்ச்சி

மலையாள திரைப்பட மற்றும் டிவி நடிகர் ஆதித்யன், பிரபல மலையாள சீரியல் நடிகை அம்பிலி தேவியை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

 

ஆதித்யனுக்கு இது 4 வது திருமணமாகும். அதேபோல், அம்பிலி தேவிக்கும் இது 2 வது திருமணமாகும். அம்பிலி தேவிக்கு திருமணமானதை கேக் வெட்டி கொண்டாடிய அவரது முன்னாள் கணவர், ”தொல்லை ஒழிந்தது” என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆதித்யன் - அம்பிலி தேவி திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது.

 

இந்த நிலையில், மனமுடைந்துபோன அம்பிலி தேவியும், ஆதித்யனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த தகவலை அவர்களே, பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களது இத்தகைய முடிவு குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.