மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை! - அதிர்ச்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக திகழும் லட்சுமி ராமகிருஷ்ணன், பெண் இயக்குநர்களில் முக்கியமானவராகவும் திகழ்கிறார். இவர் இயக்கிய நான்கு படங்களும் வெவ்வேறு ஜானர் படங்களாகவும், சமூகத்திற்கு தேவையான விஷயங்கள் பேசுபவையாகவும் அமைந்தது. மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ படம் பெரும் பாராட்டுப் பெற்றது.
நடிகை மற்றும் இயக்குநராக மட்டும் இன்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக தமிழக மக்களின் குடும்பத்தில் ஒருவராகவும் திகழும், லட்சுமி ராமகிருஷ்ணன், தைரியமாக தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார். அந்த வகையில், பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், தனது மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி தெரிவிக்க, அதனால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்திருக்கிறது.
இது குறித்து பேட்டியில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், ”நான் சிறுவயதில் இருக்கும் போது, எனது தந்தை வயதுடைய எனது உறவினர் அவரது ஆண் உறுப்பை என்னிடம் காட்டுவார். ஆனால், அப்போது எனக்கு அவர் என்ன செய்கிறார், என்று தெரியவில்லை. வளர்ந்த பிறகு தான் தெரிந்தது அவர் எவ்வளவு பெரிய வக்கீரபுத்திக்காரர் என்று, மேல்தட்டில் இருக்கும் எனக்கே இப்படி ஒரு பாலியல் சீண்டல்கள் நடக்கிறது என்றால், கீழே இருக்கும் பெண்களின் நிலை என்ன என்று யோசித்து பாருங்கள்.
நான் சொல்வது பழைய கதை தானே என்று சிலர் நினைப்பீர்கள், ஆனால் இப்போதும் இதுபோன்ற கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது. எனது மகள் லிப்ட்டில் வரும் போது ஒருத்தன், அவனது பேண்ட்டை கழட்டியிருக்கிறான். லிப்ட்டுக்குள் இருக்கும் எனது மகள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்ததோடு, அங்கிருந்து அழுதுக்கொண்டே ஓடி வந்து என்னிடம் கூறினால். ஆனால், அங்கிருந்த கேமராவில் அவனது முகம் சரியாக பதியவில்லை. இப்படி பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் கசப்பான சம்பவங்கள் குறித்து பேசுவதில்லை. ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணன் தைரியமாக தனக்கும் தனது மகளுக்கும் நடந்த இந்த கொடுமைகளை தைரியமாக பேசியிருப்பதால் அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.