ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் ஷாருக்கான் நடிப்பது உறுதியானது!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், இந்திய சினிமாவின் முக்கிய நடிகராகவும் திகழ்கிறார். ஹாலிவுட்டை பொருத்தவரை இந்திய சினிமா என்றால் ஷாருக்கான் படத்தை தான் சொல்வார்களாம். அந்த அளவுக்கு உலக அளவில் இந்திய சினிமாவின் அடையாளமாக திகழும் ஷாருக்கான், தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருவது அவரது ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது.
சல்மான்கான், அமீர் கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகரகள் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வசூலிலும் சக்கை போடு போட்டு வரும் நிலையில், ஷாருக்கானின் சமீபத்திய சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
இதற்கிடையே, விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய அட்லீக்கு ஷாருக்கானிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு முன்பாக ரஜினிக்காக ஒரு கதையை எழுதி வைத்திருந்த அட்லீ, அந்த கதையை ஷாருக்கானிடம் கூறியிருக்கிறார். அவருக்கு கதை பிடித்துவிட, நிச்சயம் நாம் சேர்ந்து படம் பண்ணலாம், என்று அட்லீயிடம் கூறியிருக்கிறார்.
ஆனால், ஷாருக்கான் அப்படி கூறிய பிறகு சில மாற்றங்களால் சுமார் 6 மாதங்களாக அட்லீயின் அடுத்தப் படம் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், விஜயை வைத்து மீண்டும் படம் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. பிறகு தெலுங்கு முன்னணி நடிகரை வைத்து இயக்கப் போவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அட்லீயின் புதுப்படம் படம் குறித்து இதுவரை வெளியான தகவல் அனைத்தையும் சமீபத்திய தகவல் பொய்யாகியுள்ளது. ஆம், அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்கப் போவது உறுதியாகியுள்ளது.
கொரோனா பிரச்சினை முடிந்ததும் பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் ஷாருக்கான், அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார், என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. எனவே, ஷாருக்கானை அட்லீ இயக்கப் போவது உறிதியாகியுள்ளது.