May 15, 2019 05:16 AM

’தளபதி 63’ படத்தில் நடிக்க ஷாருக்கான் கேட்ட சம்பளம்! - அதிர்ச்சியில் கோலிவுட்

’தளபதி 63’ படத்தில் நடிக்க ஷாருக்கான் கேட்ட சம்பளம்! - அதிர்ச்சியில் கோலிவுட்

விஜயின் 63 வது படமாக உருவாகி வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாதால், அப்படத்தை ‘தளபதி 63’ என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் இயக்குநர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் விஜய், மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் வேடத்தில் நடிப்பதாகவும், அவரது கதாபாத்திர பெயர் மைக்கேல் என்றும் கூறப்படுகிறது.

 

படம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து சில சர்ச்சைகளை எதிர்கொண்டாலும், படப்பிடிப்பு தடைபடமால் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வர, அவ்வபோது படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் தேவதர்ஷினி, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, வில்லன் வேடத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைக்க அட்லீ முயற்சித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஷாருக்கான விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும், அவரது வேடம் க்ளைமாக்ஸின் போது 15 நிமிடங்கள் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், இந்த 15 நிமிடம் நடிப்பதற்காக ஷாருக்கான கேட்ட சம்பளத்தை அறிந்த ஒட்டு மொத்த கோலிவுட்டே அதிர்ச்சியடைந்திருக்கிறது.

 

ஆம், ‘தளபதி 63’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை சம்பளமாக ஷாருக்கான் கேட்டிருக்கிறாராம். அப்படினால் அவரது 15 நிமிட காட்சிக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.