Mar 16, 2020 07:30 AM

முன்னணி நடிகரால் ஏற்பட்ட அவமானம்! - நடன இயக்குநர் சாந்தி பரபரப்பு புகார்

முன்னணி நடிகரால் ஏற்பட்ட அவமானம்! - நடன இயக்குநர் சாந்தி பரபரப்பு புகார்

குரூப் டான்ஸாராக இருந்து நடன இயக்குநராக உயர்ந்த சாந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று சுமார் 300 படங்களில் நடன கலைஞராக பணியாற்றியிருப்பதோடு, சில படங்களில் நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், நடனம் ஆடுவதை விட்டுவிட்டார், என்று கூறப்பட்டது.

 

இதற்கிடையே, சமீபத்தில் மாத இதழ் ஒன்றின் இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்த சாந்தி, கல்யாணம், பிள்ளைகள் ஆனதால் நடனம் ஆடுவதில் பிரேக் விட்டிருந்தேன். பிறகு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்ததால், அதில் கவனம் செலுத்தினேன். ஆனால், நடனம் ஆடுவதை விடவில்லை, என்றவர், அதே சமயம், தற்போது நடனம் ஆடுவதற்கு யோசனையாக இருக்கிறது, என்றும் தெரிவித்தார்.

 

மேலும், தான் இனி நடனம் ஆட வேண்டுமா? என்று யோசிக்க முன்னணி நடிகர் ஒருவரால் ஏற்பட்ட அவமானம் தான் காரணம், என்றும் தெரிவித்துள்ளார்.

 

அதாவது, தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் அளவில் இருக்கும் ஒரு நடிகரிடம் வாய்ப்பு கேட்டு சாந்தி போக, அவர் பெரிய அளவில் சாந்தியை அவமானப்படுத்திவிட்டாராம். அதில் இருந்து யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனதில்லை, என்று கூறிய சாந்தி, அந்த சம்பவத்தை யோசித்தால், நடனம் ஆடுவதற்கே தயக்கமாக இருக்கிறது, என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், அந்த நடிகர் யார்? என்பதை மட்டும் அவர் கூற மறுத்துவிட்டார்.