Aug 03, 2019 03:45 PM

திருமணம் குறித்து நடிகை கெளசல்யாவின் அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட்!

திருமணம் குறித்து நடிகை கெளசல்யாவின் அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட்!

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்தவர்களில் கெளசல்யாவும் ஒருவர். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தவருக்கு தற்போது 40 வயது நெருங்குகிறது. இருப்பினும் அவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர் தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், இதுவரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்படது. அதற்கு பதில் அளித்த கெளசல்யா, ”திருமணம் செய்து கொண்டு, கணவன், குழந்தை, என குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைக்கவில்லை. தற்போது சுதந்திரமாக வாழ்த்து வருகிறேன்.” என்று பதில் அளித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.

 

நித்யாவின் தீவிர பக்தையாக சில ஆண்டுகள் இருந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டு வந்த கெளசல்யா, பிறகு அங்கிருந்து வெளியேறி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.