Sep 12, 2019 04:21 AM

அனு சித்ராவால் விரைவாக முடிந்த படப்பிடிப்பு! - ’அமீரா’ தயாரிப்பாளர் மகிழ்ச்சி

அனு சித்ராவால் விரைவாக முடிந்த படப்பிடிப்பு! - ’அமீரா’ தயாரிப்பாளர் மகிழ்ச்சி

சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘அமீரா’ படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா டைடில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

சீமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரா.சுப்ரமணியன் இயக்கும் இப்படத்திற்கு ‘டூலெட்’ படம் மூலம் பல விருதுகளை கைப்பற்றிய செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

 

இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு ‘அமீரா’ என்று தலைப்பு வைத்துள்ளன.ர் அமீரா என்றால் இளவரசி என அர்த்தம்.

 

Anu Chithara in Ameera

 

தம்பி திரைக்களம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். காரணம், அவர் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைய போகிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பை தொடங்குவது தயாரிப்பாளர் கையில் இருந்தாலும், அதை முடிப்பது என்பது அப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் தான் இருக்கிறது. இத்தகைய சூழலில் பல படங்கள் குறிப்பிட்ட நாட்களில் முடியாமல் இருக்க, ‘அமீரா’ படக்குழுவினரின் ஒத்துழைப்பால் படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

 

இதற்கு முதல் காரணம் படத்தின் நாயகி அனு சித்தாரா தான், என்று பெருமையோடு சொல்லும் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிகுமரன், ”40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்கு முன்னதாகவே முடியப் போகிறது. ஒரு சில காட்சிகளும், க்ளைமாக்ஸ் காட்சியும் எடுதுவிட்டால் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். இதற்கு காரணம் நாயகி அனு சித்தாரா. மொழி தெரியாதவராக இருந்தாலும், காட்சிகளை புரிந்து உள்வாங்கி நடிக்கிறார். மோகன்லால், திலீப் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர், மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை என்று பெயர் வாங்கியிருக்கிறார். மொழி தெரியாத தமிழ் சினிமாவிலும் அவருக்கு அத்தகைய பெயர் கிடைக்கும் என்பது தான் சிறப்பு” என்றார்.

 

Anu Chithara in Ameera

 

அனு சித்தாரா கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம், என்று கூறும் இயக்குநர், சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் 20 நாட்களில் தங்களது காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டார்கள், என்றும் தெரிவித்தார்.

 

தென்காசி மற்றும் சென்னையில் வளர்ந்து வரும் ‘அமீரா’ படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.