Jul 12, 2020 08:07 AM

ரூட்டு மாறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரூட்டு மாறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

கன்னத் திரைப்படம் ‘யு டர்ன்’ மூலம் கவனம் ஈர்த்த ஷ்ரத்த ஸ்ரீநாத், ’விக்ரம் வேதா’ மூலம் தமிழில் பிரபலமானார். அப்படத்தை தொடர்ந்து ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் கோலிவுட்டின் முக்கிய நடிகையாக உயர்ந்திருக்கிறார்.

 

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஷ்ரத்த ஸ்ரீநாத், ’சக்ரா’, ‘மாறா’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக வாய்ப்புக்காக நடிகைகள் பலர் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். நடிப்பு திறமையில்லாத நடிகைகள் தான் இப்படி கவர்ச்சியை காட்டி வாய்ப்பு தேடுவதாக ரசிகர்கள் விமர்சிப்பதும் உண்டு.

 

ஆனால், நடிப்பு மூலம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், தற்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அந்த புகைப்படத்திற்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், பலர், “நீங்களும் இப்படி மாறிவிட்டீங்களா!” என்று அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Shraddha Srinath