ஹாட் முத்தத்தோடு நடிகர்களுக்கு சவால் விட்ட ஸ்ரேயா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் குறைந்ததும் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரேய் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கணவர் வந்த ராசியால் ஸ்ரேயாவுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்க, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தமிழில் ‘நரகாசூரன்’ மற்றும் ‘சண்டக்காரி’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் ஸ்ரேயா, தற்போது ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியானால், தெலுங்கு சினிமாவில் ஸ்ரேயாவுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் தனது கணவருடன் வீட்டுக்குள் இருக்கும் ஸ்ரேயா, இன்று ஒரு வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பாத்திரம் கழுவும் தனது கணவர் ஆண்ட்ரேயாவுக்கு ஹாட் முத்தம் ஒன்றை கொடுப்பவர், இதுபோல உங்கள் மனைவிகளுக்கு உங்களால் உதவ முடியுமா, என்று நடிகர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு சவாலும் விட்டுள்ளார்.