Feb 04, 2019 05:49 AM

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!

விஜய் சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக ‘சிந்துபாத்’, ‘மாமனிதன்’ ஆகிய இரண்டு படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

 

ஏற்கனவே ‘புறம்போக்கு’ படத்தின் மூலம் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தற்போது இரண்டாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘லாபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

விவசாயத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், காதல் விவகாரத்தால் சில காலம் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.