Jun 21, 2019 08:27 AM

சீரியல் நடிகையான ஸ்ருதி ஹாசன்!

சீரியல் நடிகையான ஸ்ருதி ஹாசன்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், வெளிநாட்டவரை காதலிக்க தொடங்கியதுமே நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது காதலரை பிரிந்திருக்கும் ஸ்ருதி ஹாசன் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

அந்த வகையில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் ‘லாபம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், டிவி சீரியல் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியவர் தற்போது டிவி சியலில் நடிக்க செய்கிறார்.

 

யூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை  மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக , திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர்.

 

இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். 

இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .

 

இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்டதாகும். இத்தொடரில் ஜெரிமி ஐர்வின்‌, பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி மற்றும் டிரேஸி இபிஈயகார்ரும் நடிக்கின்றனர்.

 

ஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டும் இல்லாமல் உலக அளவில் இசையிலும் தனது அழுத்தமான பதிவை பதிவு செய்யும் அசாத்திய கலைஞராக   இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

UKவில் இசைக்குப் பெயர் பெற்ற பல மேடைகளிலும், சபைகளிலும் அவர் பாடியுள்ளார். தற்போது அவருடைய முதல் இசை ஆல்பத்தை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார். மேலும் படங்களைப் பொறுத்த வரையில் ஸ்ருதிஹாசன் தற்போது  லாபம் படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.