May 12, 2019 06:39 AM

சிம்புக்கு கல்யாணம்! - பெண் யார்? என்பதை கூறிய பிரபல நடிகர்

சிம்புக்கு கல்யாணம்! - பெண் யார்? என்பதை கூறிய பிரபல நடிகர்

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அண்ணனுக்கு திருமணமாகத போது தம்பிக்கு திருமணமா? என்று பலர் கேள்வி எழுப்பியதோடு, சிம்புவுக்கு எப்போது திருமணம், என்றும் கேட்டு வருகிறார்கள்.

 

டி.ராஜேந்தரை சந்தித்த பத்திரிகையாளர்கள் அவரிடம் சிம்புவின் திருமணம் குறித்து கேட்டதற்கு, அவர் கண்ணீருடன் பதில் கூறியவர், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும், பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம், என்றும் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ், சிம்புவின் திருமணம் செய்துகொள்ளப் போகும்  பெண் யார்? என்பதை கூறினார்.

 

இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய கூல் சுரேஷ், “சிம்புக்கு விரைவில் திருமணம். பொண்ணு யாரு. எப்ப கல்யாணம்னு எனக்கு தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்.” என தெரிவித்தார்.

 

Cool Suresh

 

கூல் சுரேஷின் இந்த பேச்சால் சிம்புக்கு மனைவியாகப் போவது யார்? என்பதில் முன்பை இருந்ததை விட அதிகமான ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.