Sep 27, 2019 07:25 PM

மாறுவேடத்தில் சென்னைக்கு வந்த சிம்பு! - ரசிகர்கள் அதிர்ச்சி

மாறுவேடத்தில் சென்னைக்கு வந்த சிம்பு! - ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் சிம்பு என்ற ஒரு நடிகர் இருப்பதையே மறந்துபோகும் விதத்தில், தனது வம்புத்தனத்தை மீண்டும் துவங்கிய சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் போட்ட கிடுக்குப்பிடியால் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்தார். சுமார் இரண்டு மாதங்கள் அங்கேயே இருந்தவர், இந்த மாதம் தொடக்கத்தில் வருவதாக இருந்தார். ஆனால், பிரச்சினையை புரிந்துக்கொண்டவர் தனது வருகையை தள்ளி வைத்தார்.

 

இதற்கிடையே, சிம்புவின் நண்பர் ஒருவர், சிம்பு விரைவில் சென்னை திரும்புகிறார். வந்ததும் ரசிகர்களை சந்தித்து தனது அதிரடி அறிவிப்புகளை வெளியிடுகிறார், என்று ட்விட்டர் பதிவிட்டார். இதனை தொடர்ந்து சிம்பு அரசியலில் களம் இறங்கப் போகிறார் என்று சிலர் செய்தி வெளியிட்டனர்.

 

ஆனால், இவை அனைத்தும் பிரச்சினையில் இருந்து எஸ்கேப் ஆவதற்காக சிம்பு மற்றும் அவரது குடும்பத்தார் போட்ட திட்டம் என்பதை அவரது ரசிகர்கள் நன்றாக புரிந்துக்கொண்டார்கள். இதற்கு எந்த விதத்திலும் அவர்கள் ரியாக்ட் செய்யவில்லை.

 

இந்த நிலையில், இன்று சிம்பு வெளிநாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதராக, அதாவது மாறுவேடம் போட்டது போல புதிய கெட்டப்பில் சென்னை திரும்பியுள்ளார். அவர் சென்னை வந்த அந்த புதிய லுக் தற்போது வைரலாகி வருகிறது.

 

அதேபோல், அவரது வருகையை தொடர்ந்து வர இருக்கும் பிரச்சினைகளும் வைரலாகுமா? அல்லது, சிம்பு அதை சாமர்த்தியமாக ஆப் செய்வாரா, என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.